பொங்கல்

உலகெங்கும் அறுவடை திருவிழா! தமிழர் திருவிழா! – தைப்பொங்கல்

தமிழர்களின் கலாசார அடையாளமாய் நிமிர்ந்து நிற்கிறது பொங்கல் விழா, ஈழம், தமிழகம் போன்ற தமிழர் வாழும் நாடுகளில் மட்டுமல்லாமல் தமிழர்கள் புலம் பெயர்ந்துள்ள இடங்களிலும் பொங்கல் விழாவினைக் கொண்டாடி தங்கள் இன, சமூக, கலாசார, வாழ்வியல் அடையாளங்கள் தொலைந்து போகாமல் பார்த்துக் கொள்கிறார்கள். சுமார் ஐம்பது நாடுகளில் இன்று தமிழர்கள் தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல்

“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை ”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு “தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு “தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” கலித்தொகை

சங்க காலமான கி.மு. இருநூறுக்கும் கி.பி. முந்நூறுக்கும் இடைப்பட்ட காலத்திலேயே தமிழர்கள் பொங்கல் விழா கொண்டாடியதாக நம்பப்படுகிறது. தை நீராடல் என்னும் பொங்கல் விழாவில் முன்னோடியைக் குறித்த செய்திகள் கி.பி. நான்காம் நூற்றாண்டு- எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியங்களான ஆண்டாள் திருப்பாவை, திருவெம்பாவை போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டP ள்ளன.

பொங்கல் விழா தமிழர் விழாவாக பெருமையுடன் கொண்டாடப்படும் அதேவேளையில் பொங்கல் விழாவின் அர்த்தத்துடனான விழாக்கள் உலகெங்கும் கொண்டாடப்படுகினறன

ஆதிகாலத்திலேயே விவசாயிகள் அறுவடை விழாக் கொண்டாடுவதை வழக்ஙகமாகக் கொண்டிருந்தார்கள். இதற்குப் பல காரணங்கள் இருந்தன. பயிர்களில் ஆவிகள் இருப்பதாகவும் அவை மனம் குளிர்ந்தால் விளைச்சல் அமோகமாகவும், இல்லையேல் குறைவாகவும் இருக்கும் என்று மக்கள் நம்பினார்கள். அதுபோல் ஒவ்வொரு பயிருக்கும் ஒவ்வொரு காவல் தேவதை இருப்பதாகவும் அதனிடம் வேண்டுதல் செய்தால் அறுவடை அதிகரிக்கும் என்றும் நம்பினார்கள். அறுவடை செய்யும் போது பயிர்களிலுள்ள ஆவி கோபமடையும் என்பதும், அந்தக் கோபத்தை குறைக்க அவற்றுக்குப் படையல் செலுத்த வேண்டும் என்பதும் கூட ஆதியில் இருந்த நம்பிக்கைகளில் ஒன்று. பழங்களையும், காய்கறிகளையும் இறைவனுக்குப் படைக்கும் விழாவாகவும், நன்றி செலுத்தும் விழாவாகவும் இது கொண்டாடப்படுகிற து. ஆலயங்களை எல்லாம் அலங்கரித்து மக்கள் அறுவடை செழிக்க வேண்டுமென்று இறைவனை வேண்டுகிறார்கள்.

இவ்வாறு உலகெங்கும் கொண்டாடப்படும் அறுவடை விழாக்கள் இயற்கையோடு மனிதனுக்கு உரிய தொடர்பையும் இறைவனோடும் சக மனிதனோடும் மனிதன் கொள்கின்ற உறவையும் வெளிப்படுத்துபவலையாக திகழ்கின்றன. மனிதனோடும், இயற்கையோடும், இறைவனோடும் கொண்டுள்ள உறவை உறுதிப்படுத்தவும், சீரமைக்கவும் இவ்விழாக்கள் அடையாளங்களாக திகழ்கின்றன.

.உலகில் முதன் முதலில் பேசப்பட்ட மொழி,தமிழே உலகில் முதல் மந்தன் தமிழனே என்பதற்கு இதுவே சிறந்த சான்று. எனவே ஒவ்வொரு ஆண்டும் வரும் தைத்திருநாளை வெகு சிறப்பாய் கொண்டாடிக்களிப்போம்

Date

Jan 28 2024

Time

08:00 - 18:00
QR Code

Leave your comments