யாழி (ஆண்டு விழா)
தமிழ்மொழி சேமமுற வேண்டுமெனில், தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்” என்றான் முண்டாசுக்கவி பாரதி.
காலத்தோடு இணைந்தது கலாச்சாரம், பண்பாட்டோடு இணைந்தது பாரம்பரியம் என்ற சொல்லாடலுக்கேற்ப சிட்னி தமிழ் மன்றம் வருடந்தோறும் ‘யாழி’ கலை நிகழ்வை முன்னெடுக்கிறது. இந்த வருடம் 45 ஆம் ஆண்டுவிழா வெற்றிகரமாக திட்டமிடப்பட்டுள்ளது..
தமிழும் தமிழர் சார்ந்த வரலாறு மற்றும் மரபியல் சார்ந்த தலைப்புகளில் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள், செவிக்கும் மனதிற்கும் உவப்பாய் இருக்கும் கலை நிகழ்ச்சிகள் என்று நம் ‘யாழி’ கலைவிழாவில் கோலகலமாக நடைபெறும்.